முன்ஜாமீன் ரத்து - செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி.
டாஸ்மாக் முறைகேட்டில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி அவசர ஆலோசனை நடத்திவருகின்றார். விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் அவசர ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜி, தினமும் திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி, அவர் இன்று காலை திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் மூலம் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்ட நிலையில், செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.

