‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ - டிடிவி தினகரன் ட்வீட்

 
ttv

மொழிப்போர் தினத்தில் தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

‘தமிழைக் காக்க போராடிய’  மொழிப்போர் தியாகிகள் தினம்!

தமிழ் மொழியை காக்க, உயிர் நீத்த தியாகிகளின் மொழிப்போர் தினம் இன்று. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போராட்டத்தின் போது  உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.உடலையும் உயிரையும் அன்னைத் தமிழ்மொழிக்காக தியாகம் செய்த அருபெரும் தீரர்களான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம். ‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ என்பதை மறவாமல், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.