பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.1000 லஞ்சம் பெற்ற காவலர் கைது... காவல்நிலையத்தில் வைத்தே பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

 
s

கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு ரூ.1000   லஞ்சம் வாங்கிய  காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் என்பவர் விசாரித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.1000 கேட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம்  புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி ரூ.1000 லஞ்ச பணத்தை காவலர் ரமேசிடம் கொடுக்கும் பொழுது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக ரமேஷை கைது செய்தனர். ராசாயனம் தடவிய பணத்தை ரமேசிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் , செட்டிபாளையம்  காவல் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.