அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
Aug 27, 2026, 19:10 IST1787838005758
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம், தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் ஆரணி நகராட்சி அலுவலகம், மாதனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

