#BREAKING தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Jul 3, 2026, 17:13 IST1783079015405
தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

