ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ஒருவர் கைது

 
 லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ மகன் -  கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்..  ரூ.8 கோடி பறிமுதல்..

ராமநாதபுரம்  மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் சந்தியாநகர் பகுதியை சேர்ந்த டோர்ஜோ லியோன் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.

கைது

இந்த நிலையில் அவருடைய தங்கும் விடுதிக்கு மேல் பகுதியில் மூன்று முனை உயிர் அழுத்த மின் கம்பி சென்று ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் தனது தங்கும் விடுதிக்கு மேல் பகுதியில் செல்லும் உயர் அழுத்த  மின்கம்பியை அப்புறப்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மின்வாரிய  அலுவலகத்தில் மின்வணிக ஆய்வாளராக பணியாற்றும் அருள்சகாய டார்ஷன் என்பவர் உயிர் அழுத்த மின் கம்பியை சீரமைக்க 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மன உளைச்சல் அடைந்த டோர்ஜோ லியோன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் ரசாயன  தடவிய பணத்தை அவரிடம் கொடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை அடுத்து மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் அருள் சகாயம் டார்ஷனிடம் ரசாயன தடவிய பணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் ஐயாயிரம் ரூபாய் பணத்தை  யார் வாங்க சொன்னது இது போன்று முன்பு நடைபெற்று உள்ளதா என தீவிர விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.