தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Updated: Sep 22, 2026, 16:32 IST1790074974047
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கே.என்.நேரு அமைச்சராக இருந்த நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல்துறை அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையில் சோதனை நடைபெற்றது. வட்டாட்சியர் மகேஸ்வரி அறை உள்ளிட்ட பகுதிகள், கணினிகள் மற்றும் முக்கியப் பதிவேடுகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டு ஆய்வு செய்தனர்.

