தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்..!!

 
Q

தம், வல்லவன், பட்டத்து யானை, உதயம் என்.எச்.4, பர்மா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் கார்த்திக் சபேஷ்.

கடந்த சனிக்கிழமை இசையமைப்பாளர் தேவா மறைந்த சோகம் மறைவதற்குள் ஒரே குடும்பத்தில் மீண்டும் சோகம் ஏற்பட்டுள்ளது.

டயாலிசிஸ் உள்ளிட்ட உடல்நல பிரச்னையால் இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருவாரங்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இவரது உயிர் பிரிந்தது.

கார்த்திக்கின் தந்தை சபேஷும், பிரபல இசையமைப்பாளர் தான். தனது மற்றொரு சகோதரரான முரளி உடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அண்ணன் தேவாவின் படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் கடந்தாண்டு அக்., 23ல் காலமானார். சரியாக ஓராண்டு கடக்கும் நிலையில் அவரது மகன் கார்த்திக்கும் மறைந்துவிட்டார்.