சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

 
iit

சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி விளக்கம்


சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் அடிக்கடி நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன்காரணமாக அங்கு படிக்கும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுவதும், மர்ம மரணம் நிகழ்வதும் தொடர்கதையாகிவருகின்றன. 

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் வைப் புஷ்பகர் ஸ்ரீ சாய் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனை செய்வதற்காக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு  உள்ளது கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஐஐடி நிர்வாகம்,  மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மாணவப் பிரதிநிதிகள் உட்பட பேராசிரியர்கள் இந்த குழுவில் இடம்  இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய காலம் சவாலான சூழலாக இருந்து வருகிறது மற்றும் வளாகததில் உள்ள மாணவர்கள்/கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் சென்னை ஐஐடி நிறுவனம் முயற்சித்து வருகிறது என அறிக்கை வாயிலாக சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.