தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க சதி- மேலும் ஒருவர் கைது
தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை முதல் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கணேசன் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்ததில் குற்றத்தில் உடந்தை என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

