#BREAKING மேலும் ஒரு MLAவிடம் பேரம்- பரபரக்கும் அரசியல் களம்

 
#BREAKING மேலும் ஒரு MLAவிடம் பேரம்- பரபரக்கும் அரசியல் களம்

தவெக MLA பேரம் விவகாரத்தில் நேற்று கைதான கணேசன் என்பவர் திமுக நிர்வாகி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு தவெக MLAவிடம் பேரம் பேசியது அம்பலமாகியுள்ளது. உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜயிடம் பேரம் பேச முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,  நேற்று கைது செய்யப்பட்ட கணேசன் திமுக ஒன்றிய செயலாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  உசிலம்பட்டி MLA-விடம் கணேசன் மூலம் திருநாவுக்கரசு பேரம் பேச முயற்சித்ததாகவும் அப்போது ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோ ஆதாரத்தை போலீசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவில் இணைய விரும்புவதாக அறிமுகம் செய்துகொண்டு, மதுரையில் வைத்து அந்த MLA-வை கணேசன் சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கும் 35 கோடி முதல் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கணேசனை கைது செய்துள்ள போலீசார், இவ்விவகாரத்தில் யாருக்கெல்லாம் ்்தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.