#BREAKING சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

 
sabarimala sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயில், மலை ஏறிய தமிழகத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள் (67) என்ற பக்தர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sabarimala

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கிடையே தேவசம்போர்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்தது தினமும் 20,000 என்ற எண்ணிக்கையை 5 ஆயிரம் ஆக குறைத்தது இதனால் தினமும் 90 ஆயிரம் ஒரு லட்சம் கடந்த பக்தர்களின் கூட்டம் என்பது ஆயிரத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை சுவாமி தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில், மலை ஏறிய தமிழகத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள் (67) என்ற பக்தர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 22 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.