மீண்டும் ஒரு நீட் மரணம்..! சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

 
1

சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி. 2021ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வரவில்லை. இதனையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள  தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி மே 5ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு தயாராகி வந்தார். 

இந்நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அறையில் சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.