கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமா? விரைவில் இணைப்பு விமான சேவை ஆரம்பம்!!

 
flight

கோயம்முத்தூரில்  இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல மும்பைக்கு விரைவில் மற்றொரு இணைப்பு விமான சேவை இயக்கப்படவுள்ளது 
tn

கோயம்புத்தூர் பன்னாட்டு வ விமான நிலையம்,  விமான போக்குவரத்தில் இந்தியாவின் பதினைந்தாவது மிக பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். தொழில் வளர்ச்சியினாலும், உலக நாடுகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் காரணமாகவும் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிலைய பட்டியலுல் முதல் தர பட்டியலில் இருக்கிறது. கோவையின் மற்றொரு விமான நிலையம் கோவை சூலூரில் அமைந்துள்ள சூலூர் விமான படை தளம் ஆகும்.

tn

இத்தகைய கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும்,  உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல விமான சேவையானது அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா,  இங்கிலாந்து ,கென்யா ,நெதர்லாந்து, துருக்கி ,தாய்லாந்து ,பிரான்ஸ், மஸ்கட், துபாய் ,கத்தார் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் மும்பைக்கு இணைப்பு விமான சேவை சேவையை கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி இயக்கி வருகிறது .

air india flight

காலை 9 மணிக்கு கோவையிலிருந்து விமான சேவை ஆரம்பம் ஆகிறது.  அத்துடன் மேலும் ஒரு விமான சேவை தொடங்க உள்ளதாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியுள்ளார்.  விஸ்தாரா நிறுவனம் ஒரு வாரத்திற்குள் சேவையை தொடங்க உள்ளதாகவும் , இரவு 9.30 மணி அளவில் நேரடியாக மும்பைக்கு இயக்கப்படும் இந்த விமானம் , அங்கு தரை இறங்கியவுடன் உடனடியாக பல்வேறு நாடுகளுக்கு தாமதம் இன்றி விமான சேவையை பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்த இணைப்பு சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.