#BREAKING விஜய் ரோடு ஷோவில் மீண்டும் செயின் பறிப்பு
Apr 15, 2026, 18:05 IST1776256554585
தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவில் மீண்டும் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் சென்னை தியாகராயநகரில் என்.ஆனந்தை ஆதரித்து ரோடு ஷோவில் ஈடுபட்டார். அப்போது விஜயை பார்க்க வந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கோவை கணியூர் ரோடு ஷோவிலும் ஒரு பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.



