மயங்கி விழுந்த மாணவி ஶ்ரீமதி- அடுத்த அதிர்ச்சி சிசிடிவி

 
ஸ்ரீமதி

உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவு மாணவி ஸ்ரீமதி வகுப்பறைக்குள் நடந்துவரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூர், சக்தி மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 2 பயின்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13.02.2022ஆம் தேதி மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ‘மாணவி சாவில்’ ஆழ்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் 12 ஆம் தேதி இரவே மாணவி ஸ்ரீமதி சோர்வாக காணப்பட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், வகுப்பறைக்குள் மெதுவாக நடந்துவந்த ஸ்ரீமதி, மேஜைக்கு வந்து படுத்துக்கொள்கிறார். அருகில் பல்வேறு மாணவிகள் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மாணவி ஸ்ரீமதி சோர்வாக இருந்ததையோ, அவர் மேஜையில் மயங்கி விழுந்ததையோ கண்டு கொள்ளவில்லை.