முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு - சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு!!

 
tn


இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் நிறுவனர் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

tn

 யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது. வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

tn

இரு பிரிவினரிடையே  கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் தற்போது திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.