விஜய்க்கு மீண்டும் அழைப்பு!!! புறப்பட்டார்...

 
விஜய்க்கு மீண்டும் அழைப்பு!

ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து மீண்டும் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.

ஏற்கனவே 3 முறை தமிழக ஆளுநரை தவெக தலைவர் சந்தித்த நிலையில், தற்போது 4ஆம் முறையாக சந்திக்கிறார். இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் அர்லேகரை சந்திப்பதற்காக கிண்டி மக்கள் பவனுக்கு புறப்பட்டார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு.இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.