முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

 
முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

முல்லைப் பெரியாறு அணைக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து கேரள வெடிகுண்டு நிபுணர்கள்மோப்ப நாயுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

Image 

தமிழக கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணையாகும். முல்லைப் பெரியாறு அணையானது கேரளா மாநிலம்  இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையானது கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனீ, திண்டுக்கல், மதுரை, ராம்நாடு, சிவகங்கை மாவட்டங்களில் ஜீவாதாரமாக விளங்குகின்றது. முல்லை பெரியாறு அணைக்கு இன்று வெடிகுண்டு வைத்துள்ளதாக கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் வந்ததுள்ளது.

இதைதொடர்ந்து திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடுக்கி மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் முல்லை பெரியாறு அணையினை பிற்பகல் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முல்லை பெரியாறு மெயின்அணை, மண் அணை, பேபி அணை உபநீர் வழிந்தோடு மதகுகள், கேலரி மற்றும் பல பகுதிகளில் நடைபெற்றது. ஆய்வுக்கு பின் இந்த வெடிகுண்டு புரோட்டா ஆனது வெறும் புரளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அணையினை ஆய்வு செய்த வெடி குண்டு நிபுணர்கள் சென்றனர். முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு விரட்டல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.