மீண்டும் ஒரு விபத்து... விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள் விபத்தில் சிக்கினர்..!

 
1

மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கினார்.


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சென்னை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் இதுவரை பரப்புரையை நிறைவு செய்த நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தின் கரைக்குடி தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி காவல்துறையில் தவெக தரப்பு கடிதம் வழங்கி இருந்த நிலையில், 37 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த பிரச்சாரம் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு, தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தவெக நிர்வாகிகள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து அமைதியான முறையில் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பரப்புரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 9.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் மதுரை புறப்பட்டார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பரப்புரை நடைபெறும் காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான்  விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இருவர் விபத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.