மின் வாரிய கள உதவியாளர் காலில் ஷூ அணிந்து மின் கம்பம் ஏறலாம் என அறிவிப்பு

 
மின் வாரிய கள உதவியாளர் காலில் ஷூ அணிந்து மின் கம்பம் ஏறலாம் என அறிவிப்பு

மின் வாரிய கள உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வில் வெறும் காலில் மின் கம்பம் ஏற வேண்டும் என்கிற விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வில், வெறும் காலில் மின் கம்பம் ஏற வேண்டும் என்ற விதி திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மின் வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், அதற்கான பிரத்யேக ஷூ அணிந்து மின் கம்பம் ஏறலாம் என விதிமுறையில் திருத்தம் செய்துஅறிவிக்கப்பட்டுள்ளது. Pole Climbing ஷூ அணிந்து 30 அடி உயர மின் கம்பத்தை 8 நிமிடங்களில் ஏற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. 1850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய TNPSC தயாராகி வருகிறது