பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு தேதி அறிவிப்பு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு நாளை முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), வெளியிட்டுள்ளது. 1.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நியமனம் செய்யப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் (SGT - Secondary Grade Teachers), பட்டதாரி ஆசிரியர்கள் (BT Assistants), சிறப்பு கல்வி ஆசிரியர்கள் (IEDSS) மற்றும் இதற்கு இணையான பதவிகளில் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, சென்னை/கோவை/மதுரை மாநகராட்சி, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் Time Scale, Consolidated, Part-time ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு நாளை முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை http://trb.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நாள் Paper-I: 20-12-2026 மதியம் (Tentative), தேர்வு நாள் Paper-II: 20-12-2026 காலை (Tentative) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற வேண்டுமானால் TNTET தேர்ச்சி கட்டாயம் என்பதால் தான் இந்த சிறப்பு தேர்வு.

