அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அறிவிப்பு

 
admk office

அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Image

அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் பா.வளர்மதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக பேசவுள்ளனர். தம்பிதுரை எம்பி உட்பட 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை குழு, தேர்தல் விளம்பரக் குழு, சட்டக் குழு மற்றும் ஊடகவியலாளர்கள் / செய்தியாளர்களை சந்திக்கும் குழுக்களையும் அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.