செம அறிவிப்பு..! கட்டுமான தொழிலாளர்களுக்கு 5,600 ரூபாய் வார ஊதியத்துடன் இலவச பயிற்சி..!

 
1

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கொத்தனார், கம்பி வளைப்பவர், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், கொல்லர், கண்ணாடி வேலை, ஏ.சி. மெக்கானிக், பெயிண்டர் மற்றும் டைல் லேயர் ஆகிய 11 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளும் தொழிலாளர்களுக்கு தினசரி  800 ரூபாய் ஊதியம் என 7 நாட்களுக்கும், மதிய உணவு மற்றும் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இது, கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு நிலையான வருமானம் ஈட்ட உதவும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு, 7 நாட்கள் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி  நாமக்கல் வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) மற்றும் கொல்லிமலை வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தொழிலாளர்கள், தங்கள் விவரங்களை கீழ்க்கண்ட முகவரிக்குத் தெரிவித்து பயன்பெறலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம்,
(சமூக பாதுகாப்புத் திட்டம்)
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள்,
மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரில்,
நல்லிபாளையம் (அ), நாமக்கல் - 637003.

தொலைபேசி எண்: 04286 - 280220

தொடர்புக்கு: ராஜஸ்ரீ, உதவியாளர் - 8825533102, காயத்ரி, அலுவலக உதவியாளர் - 6374596895

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 11 பிரிவுகளின் கீழ் உள்ள சுமார் 1,600 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ITI) செப்டம்பர் 18 முதல் ஒவ்வொரு வாரமும் 7 நாட்களுக்கு நடைபெறும். மஸ்தூராகப் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் கூட, இந்த 11 பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பயிற்சி பெறலாம்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பீட்டுத் தொகையாக ஒரு நாளைக்கு 800 ரூபாய் வீதம் 7 நாட்களுக்கு மொத்தம் 5,600 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பயிற்சி முடிந்த மறுநாளே தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். மேலும், பயிற்சி காலத்தில் தினசரி மதிய உணவும், இரு வேளை தேநீரும் வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழும் அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் திருப்பத்தூர் மாவட்டத் தொழிலாளர்கள், திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, நல வாரிய அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.