விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்களித்தார் அன்னியூர் சிவா

 
tt

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட   64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242-வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51-வது முறையாகவும், நூர் முகமது 44-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ff

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.