குடியாத்தத்தில் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி!

 
1

குடியாத்தம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ந் தேதி பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வரை ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு தரப்பட்டது.

இதற்கு குடியாத்தம் நகர போலீசார் அளித்த பதில்: 15.09.2026ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மறுநாள் என்பதாலும், புதிய பேருந்து நிலையம் முதல் நேதாஜி சௌக் வரையுள்ள பகுதிகள் தினசரி பொதுமக்களின் அதிக பயன்பாடுள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகும். இப்பகுதிகளில் ஊர்வலம் நடத்தும் போது பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்துக்கும் நோயாளிகளுக்கும் அதிக இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், 30(2) காவல் சட்டம் அமலில் உள்ளதாலும்,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேற்கண்ட இடங்களில் ஊர்வலம் நடக்கும் போது தேவையற்ற இடையூறுகள் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதாலும்,

ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் மற்ற அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினரும் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி பொதுமக்களுக்கும், பொதுப்போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட முன்னுதாரணமாக அமையும் என்பதாலும்,

பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாள் முன்னிட்டு ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் 15.09.2026-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக செல்ல மனுதாரர் – S.சௌந்தரராசன், B.A, நகர மன்ற தலைவர், நெ.44/51, அழகு பெருமாள் கோயில் தெரு, பிச்சனூர், குடியாத்தம், வேலூர் மாவட்டம் என்பவர் அளித்த மனு மீது பரிசீலனை செய்து கீழ் நிபந்தனைகளுடன் 15.09.2026 ம் தேதி காலை 10.00 மணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.