"அண்ணன் சீர்" திட்டம்- ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

 
“சட்டசபையில் பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்”- விஜய்

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டு புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.