ஆசிரியர் தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து

 
annamalai

அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவப் பேராசிரியராக முத்திரை பதித்தவருமான அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த தினம் இன்று.

tn

பல்கலைக்கழகங்களுக்கும் பள்ளிக் கல்விக்கும் சிறப்பான கல்விக் கொள்கைகளை வகுத்த அவரது பிறந்த தினம், ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுவது எத்தனை பொருத்தமானது. 

null


சுதந்திர இந்தியாவில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.