கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

 
Annamalai

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 

fishermen


வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில்,  அசோக் (31) கருப்பு (24) சக்தி (22) ஆரோக்கிய ராஜ் (54) அனலைதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கூறி இளைஞர் கடற்படை கைது செய்து பருத்தித் துறை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்றது. 

இதேபோல்  துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 100க்கும் மேற்பட்ட னவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது வேல்மயில்  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வேல்மயில், ஆனந்தமணி, ராஜா, ரவி  உள்ளிட்ட 12 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒருவிசைப்படகுடன் 12 மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

annamalai

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாகை, புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களையும் இரு படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.