சச்சினின் சாதனையை முறியடித்த 'கிங்' கோலிக்கு வாழ்த்துகள்- அண்ணாமலை

 
K Annamalai

இன்றைய போட்டியில் 50-வது சதம் விளாசியதுடன் கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் சாதனையை முறியடித்த 'கிங்' கோலிக்கு வாழ்த்துகள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Image

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம், உலகக்கோப்பை தொடர்பில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை கோலி முறியடித்தார்.

ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார் விராட் கோலி. 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். 2003 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் எடுத்திருந்தார். அதுவே தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.இந்நிலையில் இன்றைய போட்டியில் 692 ரன்களை எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்திருக்கிறார். 


இந்நிலையில் சச்சினின் சாதனையை முறியடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய போட்டியில் 50-வது சதம் விளாசியதுடன் கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் சாதனையை முறியடித்த 'கிங்' கோலிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் மீதான விராட் கோலியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விளையாட்டின் மீதான ஆர்வம், தேசத்தின் மீதான நேசம் ஆகியவை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும் உத்வேகம் அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.