கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை

 
tn

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி 17 வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் . திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இதழியல் இலக்கிய துறைகளில் கனிமொழிக்கு அதிக ஆர்வம் உண்டு . இவர் சென்னை சர்ச் பார்கில் பள்ளி படிப்பை முடித்த நிலையில் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். .

kanimozhi

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணையதளத்தை நடத்தி வரும் இவர் தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு , குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் எனும் கலை பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார்.

kanimozhi

இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்.  இந்த சூழலில் திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி 
கனிமொழி  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.