ஈபிஎஸ் பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து

 
ttn

எடப்படி பழனிசாமி பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ep

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் தனது 17 வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பால் ரசிகர் மன்றத்தை தொடங்கினார் . 1972 ஆம் ஆண்டு அதிமுகவில் தொண்டனாக இணைந்த இவர் 1973ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவியை பெற்றார்.  பிறகு 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவையடுத்து சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பாக எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். 

EPS

 1990 ஆம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்டத்துக்கு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட இவர் 1991 இல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.  ஆனால் 1996 இல் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியை அடைந்தார் . இருப்பினும் 1998ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற இவர் , மீண்டும் 2011,  2016ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரானார்.அரசியலில் படிப்படியாக உயர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற இவர்,  தற்போது அதிமுக  என்னும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்





இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , "தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரு  எடப்பாடி பழனிசாமி  அவர்கள், நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.