பாஜக தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அண்ணாமலை? - விரைவில் அறிவிப்பு!

 
Annamalai

பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிர்பந்தம் காரணமாக அண்ணாமலை மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக, பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அண்ணாமலை தனது பொறுப்புகளை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்தார். இதனிடையே பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். 
பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக யுவமோர்ச்சா தலைவராக தற்போது கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார்.