பீகார் தேர்தல் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருந்த அண்ணாமலை!
திமுகவினர் பீகாரி மக்களை தமிழில் திட்டியதை, ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து அண்ணாமலை வெளியிட்ட வீடியோக்கள், பீகார் தேர்தல் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது.

தமிழகத்தில் பீகார் மக்களை பீடா வாயன், பானி பூரி விற்பவன், வடக்கன், என வாய்க்கு வந்தபடி திமுக தலைவர்கள் திட்டி விட்டு, பீகார் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் செல்லும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் அண்ணாமலை. திமுக தலைவர்கள் பீகார் மக்களை தமிழில் திட்டியதை ஹிந்தியில் மொழிபெயர்த்து ஒரு வீடியோ ஆல்பம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
அண்ணாமலை வெளியிட்ட வீடியோக்களை அனைத்து வட இந்திய சேனல்களும் அப்போது ஹைலைட்டாக வெளியிட்டன. அண்ணாமலை வெளியிட்ட ஹிந்தி மொழிபெயர்ப்பு வீடியோக்கள் குறித்து அனைத்து வட இந்திய சேனல்களிலும் விவாதங்கள் கூட நடந்தன. தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்ந்த லாலு பிரசாத் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. திமுகவினர் பேச்சால் பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

