1,095 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழகத்தில் 1,095 உதவி ஆய்வாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு, தேர்வு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,095 உதவி ஆய்வாளர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வு என்பது, அவர்கள் பணிக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, தங்கள் பணிகளை மேலும் ஆர்வத்துடன் தொடர உந்து சக்தியாகவும் இருக்கும். அப்படி இருக்கையில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு, போதிய நிதி ஆதாரம் இல்லை என்ற காரணம் கூறிப் பதவி உயர்வு வழங்காமல் காத்திருக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது.
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு, தேர்வு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,095 உதவி ஆய்வாளர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) February 2, 2024
ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வு என்பது, அவர்கள்…
இதுமட்டுமின்றி காவல்துறையில் சேர இளைஞர்கள் முன்வரும் ஆர்வத்தையும் குறைக்கும். 2011 ஆம் ஆண்டு காவல்துறை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்று, இத்தனை ஆண்டுகளாகப் பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.