குரல்வளையை நசுக்கும் திமுக! கிஷோர் கே சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

 
annamalai

பாஜக ஆதரவாளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி மழை வெள்ளத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் தேதி இரவு ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். 

குரல்வளையை நசுக்கும் திமுக..? தேசியவாதி கிஷோர் கே சாமி கைது..! பாஜக சட்ட  உதவி செய்யும்..! .! அண்ணாமலை ஆவேசம்

இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த கிஷோர் கே சுவாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கிஷோர் கே சாமி அவர்களின் கைதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே சாமி அவர்களின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன்” எனக் குறிப்பிட்டார்.