கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கிய திமுக அரசு- அண்ணாமலை

செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியை சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், உள்ளிட்ட 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் இன்று தம்பு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் அமாவாசை என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கள்ளச் சந்தையில் மது தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயன பவுடரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே அவரும் கள்ளச்சாராயம் அருந்தியதாதாக கூறி திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துகொண்டார்.
செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) May 16, 2023
கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார்.
கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம்… pic.twitter.com/kY7owUkQKX
செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) May 16, 2023
கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார்.
கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம்… pic.twitter.com/kY7owUkQKX
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், “செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார். கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.