“ஏப்.14 ஊழல் பட்டியல் வெளியீடு“ - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

 
Annamalai

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Annamalai
தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அண்ணாமலை புலிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறார்.  இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக,  திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகிறார் அண்ணாமலை.   திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்களின் ஊழல் பட்டியை பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.  மேலும் 13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல்  தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை அறிவித்திருந்தார். 

Image

சமீப காலமாக அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், அதனை திசைத்திருப்பும் விதமாக தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  முன்னதாக ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் செல்லும் பாதயாத்திரையை தொடங்க இருப்பதாகவும், 117 நாட்கள் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்திருந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இந்த பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.