தவெக எம். எல். ஏ. கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது- அண்ணாமலை

 
annamalai

 

கள்ளக்குறிச்சி வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், "பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.

வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.