“எ.வ.வேலு மீது வழக்குப்பதிந்து சோதனை நடத்தியதை வரவேற்கிறேன்”- அண்ணாமலை

 
விஜய் சாதனையை முறியடிப்பாரா அண்ணாமலை...?

முறைகேடு புகாாில் சிக்கிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மீது வழக்குப்பதிந்து சோதனை நடத்தியதை வரவேற்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “முறைகேடு புகாாில் சிக்கிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மீது வழக்குப்பதிந்து சோதனை நடத்தியதை வரவேற்கிறேன். குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவாா்கள் என மனதார நம்புகிறேன். தி.மு.க ஆட்சி கால ஊழல் அனைத்தையும் விசாரிக்க வலியுறுத்தியுள்ளது. PGR எனா்ஜி ஊழல், ஊட்டச்சத்து கிட் ஊழல், பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. பிரதிபலிப்பு, பின்புற அடையாள தகடுகள் கொள்முதல் செய்ததில் ஊழல் என போக்குவரத்துத்துறையில் பல ஊழல்கள் உள்ளன. தமிழ்நாடு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல், பூச்சிக்கொல்லிகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து தவெக அரசு விரைந்து விசாாித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.