அயோத்தியில் ராமர் சிலை : புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது - அண்ணாமலை நெகிழ்ச்சி!!

 
tn

கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.  


புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi  அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. புனிதமான இந்த வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தோம். 

மாநிலச் செயலாளர்கள் திரு  @VinojBJP , திருமதி  @SumathiVenkat18 , மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு  @kvanand19 ஆகியோர் உடனிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.