பிப்ரவரி 16இல் டெல்லி செல்லும் அண்ணாமலை

 
Annamalai

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தொகுதி பங்கீடு , கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

Annamalai

இந்த சூழலில் அதிமுக பாஜகவை இணைக்கும் பணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈடுபட்டுள்ளார். பாஜக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் அவர்,  தேமுதிக - பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

Annamalai

இந்நிலையில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப்.16-இல் டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. நட்டா மற்றும் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிப்.16,17இல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார்; பாமக, தேமுதிகவை பாஜக கூட்டணியில் இணைக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.