புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு - மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை நன்றி!

 
Annamalai

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை பரிசீலித்ததற்காக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எஸ்க் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தென்காசியில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் குறியீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் புளியங்குடி மக்களுக்கு உறுதியளித்தோம். புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் குறியீடு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். 


தமிழக பாஜக சார்பாக, புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை பரிசீலித்ததற்காக எங்கள் மாண்புமிகு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.