ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்

 
Ramanathapuram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

பிரதமர் மோடி கடந்த 2 ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று தனுஷ்கோடி சென்றுள்ள அவர் அரிச்சல் முனை கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு செய்தார். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். 


இது தொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், இன்றைய தினம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் திருத்தலத்தில், பகவான் ஸ்ரீராமர் வழிபட்ட ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று, இறைவனை வணங்கி வழிபடும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. மக்களிடையே அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழவும் வேண்டிக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.