இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடங்கினார் அண்ணாமலை

 
Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது இரண்டாம் கட்ட நடைபயணத்தை தென்காசியில் தொடங்கியுள்ளார். 

Image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மீது
பேரன்பு கொண்ட நம் தமிழ்ச் சொந்தங்கள் சூழ, என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட நடைபயணம், இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. 

Image

கடந்த மாதம் நடைபெற்ற முதல்கட்ட பயணத்தில் கிடைத்த பொதுமக்கள் ஆதரவும் அன்பும், சற்றும் குறையாமல் இன்றும் கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து #EnMannEnMakkal பயணத்தின் மூலம், தமிழகம் முழுவதும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நல்லாட்சி மற்றும் சாதனைகளைக் கொண்டு செல்வோம். திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம்” எனக் குறிப்பிட்டுளார்.

Image

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை, தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த ஒரு மாத காலமாக தென் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். தென்காசியில் தொடங்கியுள்ள நடைபயணம், 
கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, கம்பம், போடிநாயக்கநல்லூர், பெரியகுளம், நிலக்கோட்டை, நத்தம் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், வால்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூளூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு/தெற்கு, கூடலூர், ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு சிங்கநல்லூரில் நிறைவடைகிறது.