மோடி பிரதமராக இருக்கும் போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அண்ணாமலை

 

மோடி பிரதமராக இருக்கும் போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அண்ணாமலை

மோடி பிரதமராக இருக்கும் போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமராக இருக்கும் போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அண்ணாமலை

பாஜகவின் மாத இதழ் பத்திரிகையான ஒரே நாடு மற்றும் பாஜக அறிவுசார் பிரிவு சார்பாக மோடி ஆட்சியின் சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அதில் மோடி அரசின் 7 ஆண்டு சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலரை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதனை பாஜக உறுப்பினரும் நடிகர் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பிரதமராக மோடி இருக்கும்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி ஆண்டு சாதனை மலர் புத்தகம் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய புத்தகம், எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை. தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து go back modi என கூறலாம். இந்திய இராணுவத்தில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய போது 24 மணி நேரம் இந்தியா கெடு விதித்தது. உடனடியாக வாகா எல்லைக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார்.

ஆர்டிகல் 370க்கு பிறகு இந்தியா அமைதியான நாடாக மாறி உள்ளது.சீனா, பாகிஸ்தான் பயப்படுகிறார்கள், இந்தியாவை பாதுகாப்பாக வைத்து இருக்கும் தலைவராக மோடி இருக்கிறார். புல்வாமா தாக்குதலின்போது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் அதற்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது” எனக் கூறினார்