சேகர்பாபு மகள் என்னை தேடி வந்தார்- அண்ணாமலை

 
Annamalai

சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த சேகர்பாபு மகளுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

Image

பெற்றோரை எதிர்த்து சதீஷ்குமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்ட சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி, அண்மையில் செய்தி சேனல்களுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், காவல்துறை தனது கணவன் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்யவிட்டதாகவும், தங்களை வாழவிடாமல் துரத்திக்கொண்டே இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை நிரூபிக்கும் விதமாக திமுகவட்டச் செயலாளர் ஒருவர், அமைச்சரின் மகள் ஜெயகல்யாணியை பார்த்து, 'நாயோடு போன நாய்' என பொதுவெளியில் அநாகரீகமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் போலீசாரும் இருந்தன. 




இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு மகள் தனது பிரச்சனைக்காக என்னிடம்தான் வந்தார் எனக் கூறி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அண்ணாமலை கூறுகையில், “ அமைச்சர் சேகர்பாபு மகள் தனது பிரச்சனைக்காக என்னிடம்தான் வந்தார். குடும்ப பிரச்சனை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன். இங்கு இல்லை என்றால் கர்நாடக காவல்துறையை அணுக சொன்னேன். குடும்ப பிரச்னையில் பாஜக தலையிடுவதில்லை. ஆனால் அரசு இயந்திரம் தமிழக காவல்துறையை பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தியுள்ளனர். சாமானிய மனிதன் மீது தொடர்ந்து வழக்குப்போடுவது தவறு முதலமைச்சர் டிஜிபிக்கு இதுகுறித்து உத்தரவிட வேண்டும்.  அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.