என் தாய், என் மனைவி ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்- அண்ணாமலை

 
annamalai

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியம் ஒன்றில் நடந்த மகளிர் தின விழாவை ஒட்டி  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 13 பெண்மணிகளுக்கு சாதனை பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  

Annamalai

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பெண்கள் சிங்கங்களாக ஆண்கள் சாதனைகளை உடைத்து மேலே வருகிறார்கள். மகளிர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்பது தாயாக இருப்பது தான். பிரதமர் தனது தாய்க்கு எழுதிய டிவிட்டர் பதிவை அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டும். பெண்கள் ராணுவத்துக்கு வந்து விட்டார்கள். எல்லாத்துக்கும் வந்து விட்டார்கள். பெண்கள் நுழையாத இடமே இல்லாத அளவிற்கு அனைத்திலும் வந்து விட்டார்கள். 

அண்ணாமலை எம்.பி, எம்.எல்.ஏ ஆகிய பட்டங்களாஇ பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. ஜெயலலிதா கூட டெபாசிட் இழந்து மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றுதான் வந்திருக்கிறார். நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறேன். கடினமான பாதையை நான் தேர்ந்தெடுத்து வருகிறேன். பாஜகவை மக்கள் நம்பி வருகிறார்கள். மக்கள் பாஜகவை நம்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். என் தாய், என் மனைவி ஆகியோர் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள். அதேபோலத்தான் நானும் என் அரசியலில் பயணித்துவருகின்றனர். பாஜகவுக்கும் அதிமுகவும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு இணைவது என்பது தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. அரசியலில் அது வழக்கமான ஒன்றுதான்.” என்றார்.