அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிடில் வழக்கு - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!!

 
tt

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

annamalai

இந்நிலையில்  சென்னையில் 'பாஜக ரவுடிகளின் பட்டியல்' என 124 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வப்பெருந்தகை,  என்னை ரவுடி எனக் கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்புக் கேட்காவிடில் வழக்குத் தொடரப்படும். ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. குற்றவாளிகள் ரவுடிகளை கட்சியில் சேர்க்கும் அண்ணாமலை என்னை ரவுடி என்கிறார். தனது கட்சிக் காரர்களையே வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்கிறார் அண்ணாமலை.

selvaperunthagai

தமிழிசை சௌந்தரராஜன் சமூகவிரோதிகளை நான் இருக்கும் பொழுது கட்சியில் சேர்க்கவில்லை, இப்போது சேர்க்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு அண்ணாமலையால் பதில் சொல்ல முடியவில்லை. சொந்த கட்சிக்காரர்களை வீடியோ எடுப்பது போன்ற அருவருப்பான அரசியலை செய்யும் அண்ணாமலை சாவு வீட்டில் சென்று அரசியல் பேசி உள்ளார் என்றார்.