ஆதினத்தை என் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்.. - அண்ணாமலை...

 
அண்ணாமலை


தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்' மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், ஆதீனத்தை சுமக்க நான் நேரில் வருவேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.   

dharmapuram adheenam - தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் தருமபுரம் ஆதீனமடத்தில் 500 ஆண்டுகளாக  பட்டின பிரவேசம் நிகழ்ச்சி  பாரம்பரியமாக நடத்தப்பட்டு  வருகிறது.  இந்த  நிகழ்வின் போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வர். ஆனால் தற்போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும்  நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன்றனர்.  உயிரைக் கொடுத்தாவது ஆதீன பட்டன பிரவேசத்தை நடத்தியே தீருவோம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

dharmapuram adheenam - தருமபுரம் ஆதீனம்

இந்த நிலையில்  தருமபுரம் ஆதீனத்தை தானே தோளில் சுமப்பேன் என பாஜக மநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “ தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டிலா பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது.  ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்.  கோபாபபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையில் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.